Take a fresh look at your lifestyle.

கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு:

76

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத் திற்கு உட்பட்ட ஈசிஆர் சாலையில் உள்ள கானத்தூர் காவல் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களைய காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். மேலும், சிறப்பாக செயல்பட்டு குற்ற நடவடிக்கைகள் நடவாமல் தடுத்த காவலர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். பின்பு காவலர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.