Take a fresh look at your lifestyle.

காதலை வெளிப்படுத்திய கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்

97

‘கடல்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். அதன் பின்பு இருட்டு அறையில் முரட்டுக் குத்து, வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்திலும் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் ‘தேவராட்டம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இந்நிலையில், தங்களின் காதலை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். ரசிகர்களும் இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.