காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர்
Deputy commissioner deshmuk shekar IPS., hand overed Missing cell phone to Owners
சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் காணாமல் போன 50 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை நகரில் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி கமிஷனர் சங்கர்ஜிவால் துணைக்கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, திருல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் ஷேகர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
காவல் குழுவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து செல்போன் காணாமல் போன வழக்குகளில் தொடர்புடைய 70 செல்போன்களை கண்டுப்பிடித்து மீட்டனர். அவை இன்று (02.08.2022) காலை திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைக்கமிஷனர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் 50 செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.