சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் அம்பேத்கர் உருவச் சிலையினை கவர்னர் ஆர்.என். ரவி இன்று திறந்து வைத்தார்.
டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அம்பேத்கர் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திறந்துவைத்தார். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலர் இறையன்பு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.