கல்லூரி மாணவ, மாணவிகளின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தொடங்கி வைத்தார்
Chennai south addl cop prem anand singa IPSn conducted drug awareness rally at besant nagar
சென்னையில் கல்லூரி மாணவ, மாணவிகளின் போதை ஒழிப்பு நடை பேரணி மற்றும் விழிப்புணர்வு ஓவிய அரங்கத்தை தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா திறந்து வைத்தார்.
இன்று (ஜுன் 26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல்தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று காலை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை அருகில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் Say No to Drugs என்ற தலைப்பில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய நடைபேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், மாணவ, மாணவியர்கள் வரைந்த போதை ஒழிப்பு குறித்த ஓவியங்கள் அடங்கிய ஓவிய அரங்கத்தை பிரேம் ஆனந்த்சின்கா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளின் போதை ஒழிப்பு மவுன நாடகம் நிகழ்த்தினர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர போலீஸ் இணைக்கமிஷனர்கள் நரேந்திரன் நாயர் (தெற்கு), ரம்யா பாரதி (வடக்கு), அடையாறு துணைக்கமிஷனர் மகேந்திரன் மற்றும் சுமார் 300 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.