Take a fresh look at your lifestyle.

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா ஆயில் சப்ளை: கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது

72

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா ஆயில் சப்ளை செய்ய முயன்ற கல்லூரி மாணவர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லைகளில் கஞ்சாவை அறவே ஒழிக்கும் பொருட்டு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை, தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளர் சாலினி தலைமையிலான தனிப்படையினர் நேற்று பல்லாவரம் சந்தை செல்லும் சாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பழைய பல்லாவரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரை மடக்கிபிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது வாகனத்துக்குள் இருந்த பையை சோதனை செய்த போது அதற்குள் 10 மிலி அளவு கொண்ட 35 கஞ்சா எண்ணெய் பாட்டில்கள் இருந்தன. அதனை பல்லாவரம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர். விசாரணையில் அவர்கள் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரித்திக் (22), ராகவன் (22) என்பது தெரியவந்தது. பட்டதாரியான ரித்திக் கல்லூரி படித்த போது கஞ்சா விற்றது தொடர்பாக வழக்குகள் இருப்பதும், ராகவன் தனியார் கல்லூரியில் பி பார்ம் 4ம் ஆண்டு படித்து வருவதும் விசாரணையில் வெளிவந்தன. இருவரும் பல்லாவரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.