காவல்துறை சார்பாக சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இலவச தலைக் கவசங்களை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வழங்கி சாலைப்பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், சாலைப்பாதுகாப்பு தொடர்பாக மாணவர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை டிஜிபி சைலேந்திர பாபு டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்தினார்.