Take a fresh look at your lifestyle.

காசி தமிழ்சங்கம் போல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்: மோடி

97

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன் னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் களும் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பாரதீய ஜன தா தயாராக தொடங்கிவிட்டது. இதையொட்டிய யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநாகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் ஜனவரி 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தையொட்டி, கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பிரதமர் மோடி பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தினார்.

இதனையடுத்து தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களவையின் முதல மைச்சர்கள், பாரதீய ஜனதா மூத்த உறுப்பினர்கள் என சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், காசி தமிழ் சங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சி களை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நிகழ்ச்சிகள் மூலம் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகத்தை மாநிலங்கள் பரிமாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 9 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தினார்.

கூட்டரங்கில் கண்காட்சி ஒன்று தொடங்கியது. இந்த கண்காட்சி 6 பொருள் அடிப்படை யிலா னதாகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம், காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிப்பு, மகாகாளிஸ்வர் ஆலயம் புத்துயிரூட்டப்படல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவை வலுவான நாடாக ஆக்குவதற்கான மத்திய அரசின் செயல் திட்டங்கள், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தி பெற்ற வெற்றி தொடர் பான காட்சிகளும் கண்காட்சியில் இடம் பெற்று பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.