Take a fresh look at your lifestyle.

கறவை மாடு பண்ணை தொடங்குவதாக ரூ. 4. 81 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

75

சென்னை, விருகம்பாக்கம், ஆற்காடு ரோட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன். இவர் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘சென்னை திருமுல்லைவாயல், காட்டூர் கிராமத்தில் ஒசன் கீரின்ஸ் லீகசி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட் என்ற நிறுவனம் மூலம் Goleacha என்ற பெயரில் பால் கம்பெனி நடத்தி வருபவர்கள் கார்த்திக்கேயன், மகாலட்சுமி, சுந்தராஜன், மகேஷ்குமார் மற்றும் முத்துக் குமார். இவர்கள் நான் உள்பட பல முதலீட்டாளர்களை தொடர்பு கொண்டு அவர்கள் சொல்லும் தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவி த்தனர்.

குஜராத்தில் இருந்து கறவை மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாக தெரிவித் தனர். இதனால் நான் உள்பட 25 முதலீட்டாளர்கள் அவர்களது தொழிலில் முதலீடு செய்ய வைத்தனர். அந்த வகையில் அவர்கள் ரூ. 5 கோடியே 74 லட்சத்து 70 ஆயிரம் வரை வசூல் செய்தனர். ஆனால் அவர்கள் சொன்னது போல செய்யாமல், மாடு கள் வாங்கியதிலும், பால் விற்பனை செய்ததிலும் பல முறைகேடுகள் செய்து பொய்யாக கணக்கு காட்டி ரூ. 4 கோடியே 81 லட்சத்து 94,168 மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்தும்படி கமிஷனர் சங்கர்ஜிவால் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரிக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து நம்பிக்கை ஆவண மோசடி (EDF-I) பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த மோசடி நடந்தது உண்மை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட அதனையடுத்து கொளத்தூர், விவேக் நகரைச் சேர்ந்த சுந்தராஜன் (67) மற்றும் இவரது மகன் மகேஷ்குமார், (40) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இருவரும் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.