Take a fresh look at your lifestyle.

கர்னாடக சட்டசபைக்கு மே 10–ந்தேதி தேர்தல்: மே 13–ல் வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

61

கர்னாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்னாடகாவில் மே 10-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மே 13-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்னாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24 ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து கர்னாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்னாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தற்போது கர்னாடகாவில் 119 எம்எல்ஏ-க்களுடன் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 75 எம்எல்ஏ-க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 28 எம்எல்ஏ-க்களும் உள்ளனர். இந்த நிலையில் இன்று கர்னாடக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள். தொடர்ந்து, வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை ஏப்ரல் 21ம் தேதி என்றும் வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24ம் தேதி ஆகும். மேலும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.