Take a fresh look at your lifestyle.

கமிஷனர் அமல்ராஜ் நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

77

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் தனியார் கல்லூரியில் ஐந்தாயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில்  காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் இன்று  மாணவ, மாணவிகளிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். எஸ்ஆர்எம் கல்லூரியின் பதிவாளர் முனைவர். பொன்னுசாமி, அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருள் உட்கொள்வதினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ,
மாணவிகளிடையே கமிஷனர் அமல்ராஜ் எடுத்துரைத்தார். மேலும் போதை பொருளை தவிர்ப்போம் என்ற உறுதிமொழியினை கமிஷனர் அமல்ராஜ் படிக்க மாணவ, மாணவியகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியில் பல்கலைகழகத்தின் மாணவர் நலன் இணை இயக்குனர் டாக்டர் நிஷா அசோகன் நன்றி தெரிவிக்க தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.