கடந்த ஓராண்டில் 504 போதைக்குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை
504 drug accusedes bank account freezed cop shankar jiwal action
சென்னை பெருநகரில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை, கஞ்சா மற்றும் போதைபொருட்கள் வழக்கில் தொடர்புடைய 504 குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.
சென்னை நகரில் குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் கமிஷனர் சங்கர்ஜிவால் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும், சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive aginst Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு (2022) இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில், 1 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, அவற்றை சட்ட ரீதியாக முடக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி கண்டறியப்பட்ட 1,351 குற்றவாளிகளில் 908 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, 470 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், நேற்று (25.08.2022) ஒரு நாள் சிறப்பு தணிக்கை மூலம் இதர குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, நேற்று ஒரே நாளில் 34 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் மொத்தம் 504 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் குழுவினரின் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்வதுடன், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.