அயனாவரம், அண்ணாநகர், தரமணி மற்றும் வளசரவாக்கம் பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த 5 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா, 1.75 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 10 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (28.02.2023) காலை, அயனாவரம் பேருந்து பணிமனை அருகே கண்காணிப்பு பணியிலருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த சூரஜ்குமார், வ/20, த/பெ.ரகுநந்தன், பர்வா மெத்பூரா, பீஹார் மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 1.75 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி மேற்படி கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதே போல, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Anna nagar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (28.02.2023) காலை, அண்ணாநகர், 2வது அவென்யூ, Kora Food Street என்ற கடை அருகில் சட்ட விரோத விற்பனைக்காக போதைப்பொருள் வைத்திருந்த முகமது யாசர், வ/23, த/பெ.முனீர் அகமது, இரயில்வே காலனி 3வது அவென்யூ, சூளைமேடு, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், J-13 தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 27.02.2023 அன்று இரவு, தரமணி, அன்பழகன் நகர், சத்யா தெரு மற்றும் CSIR சாலை சந்திப்பு அருகே சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 1.தன்ராஜ், வ/29, த/பெ.தர்மராஜா, சத்யா தெரு, அன்பழகன் நகர், தரமணி, 2.கார்த்திக், வ/27, த/பெொலகிருஷ்ணன், வி.வி.கோயில், எம்.ஜி.ஆர்.நகர், தரமணி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.15 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி தன்ராஜ் மீது திருட்டு, வழிப்பறி உட்பட 4 குற்ற வழக்குகளும், J-13 தரமணி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கார்த்திக் மீது ஏற்கனவே 2 கஞ்சா வழக்குகள் உட்பட 5 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.
இதே போல, R-9 வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (28.02.2023) மதியம், காரம்பாக்கம், ஷேக்மானியம் மெயின் ரோடு, ஏழுபிடாரியம்மன் கோயில் தெரு அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த ஜீவன் யாதவ், வ/26, த/பெ.ரதியாதவ், அய்யாவு நாயக்கர் தெரு, ஆலப்பாக்கம், போரூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.1 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் சூரஜ்குமார், முகமது யாசர், தன்ராஜ், கார்த்திக் மற்றும் ஜீவன் யாதவ் ஆகிய 5 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.02.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.