Take a fresh look at your lifestyle.

ஓய்வு பெற்ற துணைக்கமிஷனரை வாழ்த்தி வழியனுப்பி வைத்த ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

Avadi police commissioner sandeep rai rathore IPS wishes for Armed police Deputy commissioner ilango

152

எந்தக்குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆயுதப்படை துணைக்கமிஷனரை ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி வழியனுப்பு விழா நடத்தி பாராட்டு தெரிவித்தார்.

 

சென்னை, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை துணைக்கமிஷனராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ. திருத்தணியைச் சேர்ந்த இவர் தமிழக காவல்துறையில் காவலராக சேர்ந்த இவர் பின்பு படிப்படியாக பதவி உயர்ந்து துணைக்கமிஷனராக உயர் பதவியை அடைந்தார். இளங்கோ பணிபுரிந்த 36 ஆண்டுகாலத்தில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நேர்மையாகவும், சிறப்பாக காவல் பணியாற்றியது காவல்துறைக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த 31ம் தேதியன்று இளங்கோா பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சிறப்பான பணியை பாராட்டிய ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இளங்கோவுக்கு வழியனுப்புவிழாவுக்கு ஏற்பாடு செய்தார். அவருக்கு பூங்கொத்து, பணவெகுமதி மற்றும் நற்சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இளங்கோவுடன் 5 எஸ்ஐக்கள், 2 தலைமைக் காவலர்களும் ஓய்வு பெற்றனர். அவர்களும் கவுரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் விழாவில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, தலைமையிட துணைக்கமிஷனர் உமையாள் மற்றும் நுண்ணறிவு பிரிவு உதவிக்கமிஷனர்கள் ரமேஷ், கருணாகரன் ஆகியோர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களை பாராட்டி பேசினார்கள். இறுதியில் ஓய்வு பெற்ற துணைக்கமிஷனர் இளங்கோ மற்றும் காவல் ஆளிநர்கள் நன்றி தெரிவித்து விடை பெற்றார்கள்.