சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும், கிட்டதட்ட ஒரு லட்சம் பக்தர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரம் பகுதியில் இருந்து 21 ஐயப்ப பக்தர்கள் தனியார் வேன் ஒன்றில் சபரிமலைக்குச் சென்றனர். அவர்களின் வேன் முண்டக்கயம் – எருமேலி சாலையில் சென்றபோது கண்ணிமலை என்ற இடத்தில் இறக்கமான பகுதியில், மாலை 3.15 மணி அளவில் சென்றபோது வேன் திடீரென கட்டுப்பட்டை இழந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தை பார்த்த வாகன ஒட்டிகளும், அப்பகுதியினரும், காவலர்களும் பள்ளத்தில் தலைகீழாக கிடந்த வேனில் இருந்து பக்தர்களை மீட்டனர். இந்த விபத்தில் 10 வயது சிறுமி சங்கமித்திரா உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். உடனியாக அவர் எருமேலி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடல், கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. காயமடைந்தவர்கள் காஞ்சரப்பள்ளி அரசு பொது மருத்துவமனையிலும், எருமேலி மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட் டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் காயமடைந்ததில் மேலும் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கண்ணிமலை இறக்கத்தில் வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த கேரளா கோர்ட் நீதிபதிகள், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.