Take a fresh look at your lifestyle.

ஐபிஎஸ் அதிகாரிகள் மனைவியர் சங்கத்தினர் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்: டிஜிபி சைலேந்திரபாபு துவங்கி வைத்தார்

72

ஐபிஎஸ் அதிகாரிகள் மனைவியர் சங்கத்தின் சார்பில் நடந்த பெண் காவல் ஆளிநர்களுக் கான சிறப்பு மருத்துவ முகாமை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் இன்று (08.03.2022) மாலை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கத்தினர் (TNIPSOWA) மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் காவல் ஆளிநர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். இம்மருத்துவ முகாம் மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் லோகநாதன், இணைக்கமிஷனர் சாமுண்டிஸ்வரி, தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்க நிர்வாகிகள், தரமணி அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மருத்துவமனை இயக்குநர் ஹர்சத்ரெட்டி, டாக்டர் சித்ரா, காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.