Take a fresh look at your lifestyle.

ஐஜி தேன்மொழி உள்பட 4 பேருக்கு தகைசால் பணிக்கான ஜனாதிபதி விருது

38

 

இந்திய அரசு 2023 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது. மேற்கண்ட விருதுகள் அனைத்திந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படுகின்றன.

காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த மூன்று அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவர்களின் பெயர்கள் பின்வருமாறு

(1) பி.சி. தேன்மொழி, இ.கா.ப., காவல்துறை தலைவர், சிறப்பு புலனாய்வு பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு
துறை, சென்னை.

(2) வே. பொன்ராமு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இணைய வழி குற்றத்தடுப்பு பிரிவு செங்கல்பட்டு மாவட்டம்

(3) பி. ரவிசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அரியலூர் மாவட்டம்.