Take a fresh look at your lifestyle.

ஏலச்சீட்டு மோசடி செய்த பெண் கைது

98

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, கீரை தோட்டம் பகுதியில் வசித்து வரும் சமுத்திராதேவி (வயது 51) என்பவர் சென்னை வண்ணாரப்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அவருக்கு தெரிந்த சுமதி என்பவர் ரூ. 1 லட்சம் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்துவதாகவும், தன்னையும், தனக்கு தெரிந்த நபர்களையும் சேர்த்து விடுமாறும் கூறினார். சீட்டு முடிந்தவுடன் பணம் சரியாக கொடுப்பேன் என கூறியதை நம்பி சமுத்திராதேவி 2 சீட்டு சேர்ந்தும், அவருக்கு தெரிந்த 5 நபர்களை சேர்த்தும் கடந்த 10.12.2021 முதல் மாதா மாதம் சரியாக சீட்டு பணம் கட்டி வந்தனர். இந்நிலையில், சீட்டு முடிந்தும், பணம் தராமல் ஏமாற்றி வந்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

போலீசார் விசாரணை செய்ததில், சுமதி என்பவர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி, சீட்டு கட்டியவர்களுக்கு தர வேண்டியம் பணம் ரூ.4,90,000- தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரி சுமதி, விசாரணைக்குப் பின்னர் நேற்று (17.12.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.