கடந்த 12.02.2023 அன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம் மையங்களிலிருந்து பணம் திருடப்பட்டது தொடர்பாக அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார். இதில் 51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். அதில் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க மறைமுக கேமிராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும், முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமிராக்கள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்தப்பட வேண்டும் என்றும், ஏ.டி.எம்கள் உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்க வழிவகை செய்ய வேண்டுமென்பது போன்ற பல்வேறு திருட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.