முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் செயற்கை மணல் (எம்.சேண்ட்) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.