சென்னை மண்ணடியில் என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து ரூ. 30 லட்சம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை, மண்ணடி மலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை அப்துல்லாவின் கடைக்கு டிப்டாப் உடையில் வந்த 3 பேர் கும்பல் தங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்று கூறி கடையை சோதனை செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அங்கு சோதனை மேற்கொண்ட நபர்கள் வீட்டிலும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி யுள்ளனர். அதன் பேரில் அப்துல்லா தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கி ருந்த ரூ. 30 லட்சம் பணத்திற்கு ஆவணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்வதாக கூறிய அதனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவினர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசாருக்கு உளவுப்பிரிவு போலீசார் மூலம் தெரியவரவே உடனடியாக அப்துல்லா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அப்துல்லா வீட்டிற்கு வந்தது என்ஐஏ அதிகாரிகள் அல்ல. அவர்கள் போலி ஆசாமிகள் என்றும் என்ஐஏ என்று சொல்லி ரூ. 30 லட்சத்தை ஆட்டையைப் போட்டது தெரியவந்தது.
அதனையடுத்து அப்துல்லாஹ் அளித்த புகாரின் பேரில் அவரது வீட்டின் அருகே இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து ரூ. 30 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணமா என்ற கோனத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.