எந்த மழை வந்தாலும், என்ன புயல் அடித்தாலும் மக்களை காக்கும் நடவடிக்கையில் அரசு தளராமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-வர் கேட்டறிந்தார். பின்பு பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தபின் முதல்வர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ‘எந்த மழை வந்தாலும், என்ன காற்றடித்தாலும் அதை சமாளித்து, மக்களை காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து அரசு ஈடுபட்டு வருகிறது. மாவட்டங்களில், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்’ என்றார்.