Take a fresh look at your lifestyle.

ஊட்டி பழங்குடியின குழந்தைகள் கல்வி: டிஐஜி முத்துசாமி புது முயற்சி

327

ஊட்டி பழங்குடியினரின் குழந்தைகளின் கல்வி தடையில்லாமல் தொடர்வதற்கு கோவை சரக காவல் டிஐஜி முத்துசாமி புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஊட்டி பழங்குடி மக்களுடன் கோவை டிஐஜி முத்துசாமி

மேற்கு மண்டல காவல் கட்டுப்பாட்டில் உள்ளது ஊட்டி மாவட்டம். கோவை டிஐஜி முத்துசாமி ஊட்டி காவல் மாவட்டத்தில் காவல் பணி மட்டுமல்லாது கோவை மண்டல ஐஜி சுதாகர் ஆலோசனையின் பேரில் அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று டிஐஜி முத்துசாமி ஊட்டியில் உள்ள முருக்கம்பட்டி என்ற மலை கிராம மக்களை சென்று சந்தித்தார்.

முருக்கம்பட்டி கிராமம் ஊட்டியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் கேரள – தமிழக எல்லையில் உள்ளது. அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதியின்றி மிகவும் வறுமையில் உள்ளனர். அவர்களுக்கு மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஊட்டி காவல்துறை சார்பில் டிஐஜி முத்துசாமி வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் பழங்குடி மக்களின் குழந்தைகளின் கல்வி தடையில்லாமல் தொடரவும் வழி வகை செய்ய அரசின் மூலம் உதவ உள்ளதாக டிஐஜி முத்துசாமி தெரிவித்தார்.