Take a fresh look at your lifestyle.

உலக கால்பந்து போட்டி: தேசிய விடுமுறையை அறிவித்த சவுதி அரசு

70

உலக கால்பந்து போட்டியில் இன்று சவுதி அரேபிய அணி வெற்றி பெற்றதை அடுத்து நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். ஆட்ட த்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முடிவில் 2- 1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.