ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாகவும், மினி அரசியலமைப்பு போன்று உள்ளதாகவும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.
இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்ற புத்தகத்தில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு விஷயங்கள் மற்றும் மிகச் சிறந்த கட்டுரைகள் அதில் உள்ளது. ஜனநாயகத்தின் தாய் இந்தியா. நமது நரம்புகளில், நமது கலாச்சாரத்தில், நாம் மேற்கொள்ளும் பணிகளில் ஜனநாயகம் இருக்கிறது. இந்திய சமூகம் இயற்கையாகவே ஜனநாயக சமூகம். புத்தமத துறவிகளின் சங்கத்தோடு இந்திய நாடாளுமன்றத்தை அம்பேத்கர் ஒப்பிட்டுள்ளார். தமிழகத்தின் மிகச் சிறிய ஆனால் புகழ்பெற்ற கிராமமான உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டில் கிராம சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. இது 1100 1200 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட கல்வெட்டு. உலகையே வியக்க வைக்கிறது. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியல் சாசனம். கிராம சபையில் உள்ளதையும், கிராமசபை செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதன் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறது.
இதேபோல், 12ம் நூற்றாண்டில் கர்நாடகாவில் கட்டப்பட்ட பசவேஸ்வரா ஆலயத்தில் அனுபவ மண்டபம் என ஒரு மண்டபம் உள்ளது. எவர் ஒருவரும் தனது அனுபவத்தை எவ்வித தயக்கமும் இன்றி கூறுவதற்காக இது கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் ஏராளமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முறை பத்ம விருதுகளை, பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பழங்குடி சமூகத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் அதிக அளவில் பெற்றுள்ளனர். பழங்குடி வாழ்க்கை, நகர வாழ்க்கையில் இருந்து வேறு பட்டது. அதற்கென்று சொந்த சவால்களை கொண்டுள்ளது. இவை எல்லாம் இருந்த போதும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர். பழங்குடியினரின் மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா ஆகியவை பற்றிய பணிகளில் ஈடுபட்ட பல பெரும் பிரபலங்கள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அது நாம் அனைவருக்கும் பெருமை பட வேண்டிய விஷயம்.
சித்தி, ஜார்வா மற்றும் ஓன்ஜ் ஆகிய பழங்குடியினரை பற்றிய பணிகளில் ஈடுபட்டவர்கள் இந்த முறை பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். யோகா, சுகாதாரத்துடன் தொடர்புடையது. சுகாதாரத்தில் சிறுதானியங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந் தியா முன்மொழிந்ததை தொடர்ந்து, சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டை கொண்டாட ஐக்கிய நாடுகள் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடக்கும் 2 பிரச்சாரங்களிலும் மக்கள் பங்கேற்பதால், புரட்சி வரும். யோகாவையும், உடற்த குதியையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மக்கள் ஏற்றுள்ளதால், இந்த பிரச் சாரத்தில் அதிகளவில் பங்கேற்றுள்ளனர். அதேபோல், சிறுதானியங்களையும் அதிக மக்கள் எடுத்து கொண்டு வருகின்றனர். சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகள் இதனால் மிகப் பெரிய உற்சாகமடைந்துள்ளனர்.
சிறுதானிய தொழில்முனைவோர்களை பற்றி நீங்கள் கேட்டு அறிந்ததுண்டா? ஒடிசாவில், சிறுதானிய இயக்கத்தின் ஒரு பகுதியாக சுந்தர்கார் என்ற பழங்குடி மாவட்டத்தின் மகளிர் சுய உதவி குழு ஒன்று தற்போது தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் பிற உண்பதற்கான பொருட்களை சிறுதானியங்களில் இருந்து உருவாக்கி வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டு உள்ள 1,500 பெண்கள், சிறு தானியங்களில் இருந்து குக்கீஸ்கள், ரசகுல்லா, குலாப் ஜாமூன் என ஒவ்வொன்றையும் உருவாக்கி வருகின்றனர். சந்தையில் அவற்றின் தேவை அதிகரிப்பால், அந்த பெண்களின் வருவாயும் அதிகரித்து உள்ளது
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.