Take a fresh look at your lifestyle.

உதவி ஆய்வாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பயிற்சி துவக்கம்

74

தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் 16 மகளிர் உட்பட 21 துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் 76 மகளிர் உட்பட உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு பயிற்சிகள் துவங்கியது. இந்த பயிற்சி ஓர் ஆண்டு காலம் நடைபெறும். அதில் காணொளி காட்சியின் வாயிலாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை வழங்கினார். இந்தப் பயிற்சியில் பங்கு பெற்றுள்ள பயிற்சியாளர்களில் பொறியியல் பட்டதாரிகள் 215, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் 242, மருத்துவ பட்டதாரி 02 உள்ளனர் இவர்களில் 127 பயிற்சியாளர்கள் ஏற்கனவே பல்வேறு அரசு பணிகளில் பணிபுரிந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி துவக்க உரை வழங்கினார்.

இவ்விழாவில் டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டு பயிற்சியைத் துவக்கி வைத்து பேசுகையில், காவல்துறையில் பணி செய்யும் வாய்ப்பு அரியது. பயிற்சியால் மட்டுமே கடமைகளை சிறப்பாக செய்யமுடியும். நேர்மை, தூய்மை, ஒழுக்கம், நன்நடத்தை போன்ற நற் பண்புகள் பயிற்சி காலத்தில் கற்க வேண்டும். அறிவியல் புலன் விசாரணை, கணினி, தடயவியல், சட்டம், மேலாண்மை போன்றவற்றை கற்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணித்திறன் மேம்படுத்துவதோடு மனிதர்கள் பற்றிய கல்வி ஓராண்டு கற்க வேண்டும். மேலும் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் கூடுதல் இயக்குநர் ஐஜி ஜெயகவுரி நன்றியுரையும், எஸ்பி செல்வநாகரத்தினம் வரவேற்புரையும் வழங்கினார்.