Take a fresh look at your lifestyle.

உதயநிதி ஸ்டாலின் புதிய பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

63

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலி னுடன், மலையாள நடிகர் பகத் பாசில்,

நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி ‘மாமன்னன்’ படக்குழு சார்பில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அந்த வீடியோவில் உதயநிதி ஸ்டாலின் கையில் தீப்பந்தத்துடன் நின்றுகொண்டிருக்கிறார்.