உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 34 குழந்தை களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்க மோதிரங்கள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பின ருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அதனை கொண்டாடுகிற விதத்தில் சைதாப்பேட்டை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் நேற்றைக்கும், நேற்றைய முன்தினமும் பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வழங்கினார். சைதை பகுதி தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ண குமார் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. இதனை தொடர்ந்து அடையாறு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் நேற்றைக்கு பிறந்த 9 குழந்தைகளுக்கும், மேடவாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அணிவித்தார்.