Take a fresh look at your lifestyle.

உக்ரைனில் 211 ராணுவத் தளவாடங்கள், 67 டேங்கர்களை அழித்த ரஷ்யா

93

ஐ.நா., அகதிகள் முகமை செய்தித் தொடர்பாளர் ஷபீனா மன்டூ கூறும் போது, ‘‘உக்ரைனில் இருந்து இதுவரை ஒரு லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். இதே நிலை நீடித்தால் 40 லட்சம் பேர் வரை வெளியேற வாய்ப்புள்ளது’’ என்றார். இந்நிலையில், உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள்; 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய படைகள் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன. அந்த நகரின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘‘உக்ரைனில் தொடர்ந்து பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது. உக்ரைனில் முன்னெச்சரிக்கை இன்றி நிலைமை மோசமடையலாம். அதனால், அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு அருகேயுள்ள பாதுகாப்பு முகாம்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்’’ என்று அறிவுறுத்தி உள்ளது.