Take a fresh look at your lifestyle.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானார்

42

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் காலமானார்.

தந்தை பெரியாரின் சகோதரர் மகன் ஈ.வெ.கி. சம்பத். திராவிடர் இயக்க மூத்த தலை வர்களில் ஒருவராக இருந்த இவரது மனைவி சுலோச்சனா சம்பத் அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளராக இருந்தார். இவர்களது மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங் கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா (வயது 46). கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ.வுக்கு கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் மரணமடைந்தார். திருமகன் ஈவேராவிற்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் ஈரோட்டில் கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.