ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில் அண்ணா தி.மு.க. சார்பில் நாங்களும் வேட்பாளரை நிறுத்துவோம் என்று இன்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இரண்டு தரப்பிலும் கூட்டணி கட்சி தலைவர்களை தனித்தனியே சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே த.மா.கா. தலைவர் ஜி.கே. வாச னை மூத்த நிர்வாகிகள் சந்தித்துள்ள நிலையில் இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோரை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சந்தித்து பேசினார்கள். ஓ.பன்னீர்செல்வம் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். அவரிடம் தாங்கள் நிறுத்தும் அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறை வைய டுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் இந்த தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்து இருந்ததால் இந்த தடவையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல அண்ணா தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர் தலில் அண்ணா தி.மு.க. வோட்டியிடுவதால் வேட்பாளர் தேர்வு குறித்து நேற்று சேலத்தில் உள்ள வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத் தினார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.