ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கிருஷ்ண னுண்ணி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 238 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை கணினி வழியில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ந் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணைய த்தின் இணையதளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு இயந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 474 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 286 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களில் 310 இயந்தி ரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக் கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என தெரிவித்தார்.