ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடிக்க துவங்கி விட்டது. தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். நேற்று அவர் முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்தார். அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் 26 ந் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளருக்கு த.மா.கா. ஆதரவு அளிக்கும் என்று அறிவித்துள்ள அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தேர்தல் பணிக்காக 16 பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளார். பாரதீய ஜனதா அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது தேர்தலில் போட்டி யிடுமா என்ற எதிர்பார்ப்பு இருந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை தேர்தலில் பா.ஜ.க. போட்டி யிடாது என்பதை சூசகமாக தெரிவித்தார். கட்சி பலத்தை நிரூபிப்பதற்கு இது நேரமல்ல; தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான அ.தி.மு.க. கூட்டணி வெற்றியே முக்கியம் என்று அவர் கூறினார்.
அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி முழுவீச்சில் இறங்கி உள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பு கின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை யில் இன்று திங்கட் கிழமை முதல் 26 ந் தேதி – வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15 ஆயிரம் ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப் பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.