Take a fresh look at your lifestyle.

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ்சுக்கு எதிராக வியூகம்: எடப்பாடி ஆலோசனை

39

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவின் பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் எடப் பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர் செல்வம் களம் இறங்க உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட போவதாக அவர் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனி சாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப் பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத் தில் இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல் பாடுகள் அமைந்தால் அதனை முறியடிக்கவும் இபிஎஸ் வியூகம் அமைக்க வுள்ளாராம்.