Take a fresh look at your lifestyle.

ஈமு கோழி மோசடி வழக்கு குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை: எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

78

ஈமு  கோழி மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்று தந்த புலன் விசா ரணை அதிகாரி எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் பாராட்டினார்.

ஈரோடு பெருந்துறை, குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனமானது பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகை பொய்யான வாக்குறுதி கொடுத்து, பல திரும்ப கிடைக்கும் என்று முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்காமல் மெகா மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப் பட்டது. கோவையில் 306 முதலீட்டாளர்களிடம் ரூ. 5 கோடியே 65 ஆயிரத்து 83 ஆயிரத்து 840- மற்றும் ஈரோட்டில் 829 முதலீட்டாளர்களிடம் ரூ. 26 கோடியே 58,32,570- ஏமாற்றப் பட்டதற்காக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவழக்குகளிலும் 18.02.2023 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பில் இரண்டு வழக்குகளிலும் ஈமு கோழி நிறுவன மோசடி ஆசாமிகள் மயில் சாமி மற்றும் சக்திவேல் இருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கோயம் புத்தூர் வழக்கில் ரூ. 5,68,48,000- அபராதமும், ஈரோடு வழக்கில் ரூ.28,72,32,000- அபராதமும் வழங்கப்பட்டது. அபராதத் தொகைகளை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்க ளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. இவ்வழக்கை திறம்பட விசாரித்து குற்றவா ளிகளுக்கு பாதிக்க ப்பட்டவர்களுக்கு இழப்பை மீட்டுத் தந்த காவல் தண்டனையும் பெற்றுத்தந்த எஸ்பி பாலாஜி சரவணன் உள்ளிட்ட காவல் அலுவலர்களை சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வரவழைத்து டிஜிபி சைலேந்திரபாபு நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.