ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப் படவில்லை. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும் தி.மு.க.விற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளுக்கும் நன்றிகள். நேற்று முதலே தேர்தல் பிரச்சார வேலை களை தி.மு.க. தொடங்கியிருக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சிக்காரன் என்ற அடிப்படையில் முதலமைச்சருக்கும் தி.மு.க.விற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி மேலிடம் அறி விக்கும் என்று நினைக்கிறேன். இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். நான் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன்” என்றார்.