இலங்கைக்கு தனது ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளதாகவும், காவல்துறை சார்பில் அனைத்து
அதிகாரிகளுக்கும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கி உதவும்படி டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
அது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிக்கை விவரம்
‘‘இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக இலங்கை மக்கள் கடும்
இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கை மக்களின் துயரினை துடைக்கும் வகையில் தமிழக முதல்வர்
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோருக்கு உரிய வருமான வரிவிலக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நான் என்னுடைய ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக
வழங்குகிறேன். மனிதாபிமான, அடிப்படையில் நிவாரண நிதிக்கு வழங்க விரும்பும் காவல் ஆளிநர்கள்
தங்களால் இயன்ற பண உதவியை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
போல் மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ, ECS மூலமாகவோ, காசோலை, வரைவு காசோலை மூலமாகவோ
வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்கொடை வழங்குபவர்களுக்கு தேவையான அறிவுரைகளை
வழங்குமாறு பல்வேறு பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.