Take a fresh look at your lifestyle.

இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்: சென்னை நகரில் விடிய விடிய கனமழை

60

வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.