Take a fresh look at your lifestyle.

இன்று காணும் பொங்கல்: சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்த மக்கள் வெள்ளம்

99

இன்று காணும் பொங்கலையொட்டி சென்னை மெரீனா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்தனர்.

இன்று காணும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், கடற்கரை, வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை குடும்பம் குடும்பமாக திரண்டனர். பெரும் பாலான இடங்களில் மக்கள் உணவுகளை வீட்டிலிருந்து எடுத்து வந்து கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டனர். சிறுவர்கள் சுற்றி விளையாடி மகிழ்ந்தனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையிலும் காணும் பொங்கல் மீண்டும் களை கட்டியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் காலை முதலே தங்கள் குடும்பத்தினரோடு வந்து குவியத் தொடங்கியுள்ளனர். இதேபோல் சென்னையில் புகழ் பெற்ற வணிக வளாக ங்களிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தினரோடு சென்று பொழுது போக்கினர். பராமரிப்பு காரணங்களுக்காக வாரந்தோறும் விடுமுறை விடப்படும், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை காணும் பொங்கலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையான இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பூங்காக்க ளில் எல்லாம் காலை 8 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியது. வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை கடற்கரையில் அமர்ந்து மக்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

பொதுமக்கள் கடலில் இறங்க தடைவிதிக்க பட்டுள்ளதால், கடற்கரைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க பட்டுள்ளன. ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளன. குற்ற நிகழ்வுகளை தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக் கப்படுகிறது. மெரினா அருகே நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கடற்கரையில் குழந்தைகள் காணாமல் போனால் உனடியாக மீட்க, அனைத்து குழந்தைகளின் கைகளிலும் அடையாள அட்டைகள் கட்டப்பட்டன.

சென்னையில் பொதுமக்கள் அதிகள் கூடும் சுற்றுலா இடங்களில் எந்தவித அசம் பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூடுதல் காவல்துறை ஆணையர்கள் அறிவுரை பேரில், இணை ஆணையர்கள் ஆலோசனைகளின் பேரில் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மணற்பரப்பிலும் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.