Take a fresh look at your lifestyle.

இந்திய கடலோர காவல் படையின் விமான தளத்தை சுற்றிப்பார்த்த காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகள்

69

சென்னை நகர காவல் சிறார் மன்றத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி இந்திய கடலோர காவல் படையின் விமான தளத்துக்கு நேரில் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி மகிழ்வித்தார்.

சென்னை நகரில் சிறார் மன்றங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு காவல்துறையுடன் நல்லுறவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நேரடி மேற்பார்வையில் சிறார் மன்றங்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னதாக சிறார்களுக்கு கல்வி சுற்றுலாவாக மெட்ரோ ரயில் பயணம், போர்ப்படை கப்பல், காவல் அருங்காட்சியகம், ரயில் அருங்காட்சியகம் மற்றும் பிர்லா கோளரங்கம் ஆகியவை சுற்றிக் காட்டப்பட்டன. மேலும் சிறார்களுக்கு விளையாட்டு போட்டி, ஓவியப் போட்டி போன்ற தனித்திறன் போட்டிகள் நடத்தியும் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி, சிலம் பாட்ட பயிற்சி, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகியவை வழங்கியும்,

புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு நூலக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கியும், சிறுவர் தினம் போன்ற நாட்களை அவர்களுடன் சேர்ந்து கொண்டா டியும் காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை நகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் சிறார் மன்றங்களில் உள்ள சுமார் 100 மாணவர்கள், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு படையின் விமான தளத்திற்கு (Indian Coast Guard Air Station) கல்வி சுற்று லாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி கடலோர பாதுகாப்பு படையின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்  அவர்க ளுக்கு சுற்றிக்காட்டினார். இதன் மூலம் சிறார் மன்ற மாணவ, மாணவிகள் புதிய அனுபவத்தை பெற்றனர்.