Take a fresh look at your lifestyle.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக பிடி உஷா தேர்வாகிறார்

135

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதியன்று டில்லியில் நடக்கிறது. இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்தார். சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காததால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.