சென்னை நகரில் பள்ளிக்கரணை துணை ஆணையரின் புத்தாண்டு வாழ்த்து காவலர்கள் உள்ளிட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை தாம்பரம் காவல் ஆணையரக காவல் மாவட்டமான பள்ளிக்கரணை போலீஸ் துணைக்கமிஷனராக இருப்பவர் ஜோஷ் தங்கையா. இன்று புத்தாண்டு பிறப்பதை ஒட்டி ஜோஷ் தங்கையா காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு தனது வாழ்த்துச்செய் தியை அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘பள்ளிக்கரணை காவல் மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளும், காவல் ஆளிநர்களும் மாதத்திற்கு குறைந்தது ஒரு புத்தகத்தையாவது தேர்வு செய்து வாசித்து அதை குடும்பத்துடன், நண்பர்களுடன், குழந்தைகளுடன் விவாதித்து ஒரு மேம்பட்ட அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முயற்சிப்போம். நானும் The IKIGAI journey என்ற புத் தகத்தை தேர்வு செய்துள்ளேன். உங்கள் நண்பர்களையும், குடும்பத்தாரையும், குழந்தை களையும் இது போன்று மாதம் குறைந்தது ஒரு புத்தகம் வாசிக்க சொல்லுங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்’’ இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு வாழ்த்து என்றால் சிம்பிளாக புத்தாண்டு வாழ்த்து என்று குறிப் பிட்டு அனுப்புவது வழக்கம். ஆனால் ஜோஷ் தங்கையாவின் ‘புத்தகம் படியுங்கள்’ என்ற இந்த விழிப்புணர்வு மற்றும் அறிவுப் பூர்வமான வாழ்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த விழிப்புணர்வு புத்தாண்டு வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.