Take a fresh look at your lifestyle.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 132 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

110

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந் தது. இதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மாவும், அஸ்வினும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். சுழலுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் இருவரும் மிகுந்த எச்சரிக் கையுடன் விளையாடினர். அஸ்வின் (23 ரன், 62 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்கோர் 118-ஐ எட்டிய போது டாட் மர்பியின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து புஜாரா (7 ரன்), முன்னாள் கேப்டன் விராட் கோலி (12 ரன்) இருவருக்கும் மர்பி ‘செக்’ வைத்தார். இதில் கோலி தேவையில்லாமல் லெக்ஸ்டம்புக்கு மிகவும் வெளியே தாழ்வாக சென்ற பந்தை தட்டிவிட முயற்சித்த போது, பந்து பேட்டில் லேசாக உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கியது.

அதிரடி சூறாவளியான அறிமுக வீரர் சூர்யகுமார்யாதவும் (8 ரன்) நிலைக்கவில்லை. நாதன் லயன் வீசிய பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது சரியாக திரும்பிய அந்த பந்து பேட்டு க்கும் காலுக்கும் இடையே ஊடுருவி ஸ்டம்பை தாக்கியது. அப்போது இந்தியா 168 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது. இதைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவுடன், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் பொறு மையுடன் பிரமாதமாக ஆடிய ரோகித் சர்மா பவுண்டரியுடன் தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார். அதே சமயம் கேப்டனாக அவர் ருசித்த முதல் சதமாகும்.

80 ஓவருக்கு பிறகு 2-வது புதிய பந்து எடுக்கப்பட்டது. கம்மின்ஸ் வீசிய இதன் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா (120 ரன், 212 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். அடுத்து இறங்கிய புதுமுக விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் (8 ரன்) வந்த வேகத்தில் பெவி லியன் திரும்பினார். இந்த சூழலில் ரவீந்திர ஜடேஜாவுடன், ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல் கூட்டணி அமைத்தார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 114 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்து 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா 66 ரன்களுடனும் (170 பந்து, 9 பவுண்டரி), அக்‌ஷர் பட்டேல் 52 ரன்களுடனும் (102 பந்து, 8 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த டெஸ்டில் இதுவரை 144 ரன்கள் முன்னிலை பெற்று ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ள இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ஜடேஜா, அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும், அக்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

உணவு இடைவேளைக்கு பின் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. முதலில் களம் இறங்கிய உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானத்துடன் விளையாடிய போதும் அஸ்வினின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கவாஜா 5 ரன்களிலும், வார்னர் 10 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினார்கள். அதன்பின் களம் இறங்கிய லாபஸ் சாக்னே, ஸ்டீவ் ஸ்மித் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப் படுத் தினார். ஆனால் அந்த கூட்டணியை ஜடேஜா உடைத்தார். லாபஸ் சாக்னே அவுட்டாகி வெளியேற மாட் ரென்சா களம் இறங்கினார். ஆனால் அவர் வந்த வேகத்தில் 2 ரன்களிலும், அடுத்து வந்த ஹாண்டஸ் ஹோம் 6 ரன்களிலும், அதன் பின் களம் இறங்கிய அலெக்ஸ் கேரி 10 ரன்களிலும் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர். இதன்பின் களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் மறுபுறம் நிதானமாக ஆடி வரும் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்தார். ஆனால் வந்த வேகத்தில் ஜடேஜா பந்துவீச்சில் கம்மின்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். அதன்பின் மர்பி களம் இறங்கினார். அவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் லியோன் களம் இறங்கி ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்தார்.

லியோன் 8 ரன்களிலும் அடுத்து வந்த போலாண்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஷமியின் பந்து வீச்சில் வீழ்ந்தனர். இதனால் 91 ரன்னில் ஆல் அவுட்டானதால் இந்தியா 132 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.