Take a fresh look at your lifestyle.

‘ஆவின்’ நிறுவனத்தின் விதவிதமான கேக்: அமைச்சர் சா.மு. நாசர் அறிமுகம்

80

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு ‘ஆவின்’ நிறுவனத்தின் விதவிதமான கேக்குகளை அமைச்சர் சா.மு.நாசர் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஆவின் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் மற்றும் கேக் வகைகள் விற்பனை செய்யப்படும். ஆவின் நிறுவனம், பண்டிகை காலங்களை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பல புதிய இனிப்பு வகைகள் மற்றும் பால் உபபொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது ஆவின் சிறப்பு இனிப்பு விற்பனை பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.

அதேபோன்று, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் கொண்டாடும் வகையில் சிறப்பு கேக் வகைகளான பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பிள் கேக், ஒயிட் பாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் ஆகியவை 800 கிராம், 400 கிராம் மற்றும் 80 மில்லி கிராம் அளவுகளில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும்.

எப்போதும் போல, ஆவின் பொருட்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி பயன்படுத்த வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருகம்பாக்கத்தில் உள்ள அதிநவீன ஆவின் பாலகத்தில் நடைபெற்ற சிறப்பு மிக்க நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இக்கேக்கு வகைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துவைத்தார். மேலும், இவ்விழாவில் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி, பால்வளத்துறை ஆணையர் ந. சுப்பையன், இணை மேலாண்மை இயக்குநர் கே.எம்.சரயு மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பொதுமக்கள் மேற்கண்ட கேக் வகைகள் மற்றும் சிறப்பு இனிப்புகளை மொத்தமாக ஆர்டர் செய்ய சென்னை தலைமை அலுவலகம் 7358018395, வடக்கு மண்டலம் 9566860286, மத்திய மண்டலம் 9790773955, தெற்கு மண்டலம் 9444728505 மற்றும் ஆவின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள aavinspecialorders@gmail.com மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். கட்டணமில்லா எண் : 18004253300 ஆவின் கேக் வகைகள் விலைப்பட்டியல் விபரம் வருமாறு:

பிளாக் பாரஸ்ட் கேக் 800 கிராம் ரூ.560, 400 கிராம் ரூ.280, 80 கிராம் ரூ.70.
சாக்கோ ட்ரிபில் கேக் 800 கிராம் ரூ.700, 400 கிராம் ரூ.350.
ஸ்ட்ராபெரி கேக் 800 கிராம் ரூ.720, 400 கிராம் ரூ.360, 80 கிராம் ரூ.70.
பைனாப்பில் கேக் 400 கிராம் ரூ.360, 80 கிராம் ரூ.70.
ஒயிட் ஃபாரஸ்ட் கேக் 800 கிராம் ரூ.720, 400 கிராம் ரூ.360, 80 கிராம் ரூ.70.
பட்டர்ஸ்காட்ச் கேக் 800 கிராம் ரூ.800, 400 கிராம் ரூ.400, 80 கிராம் ரூ.70.
ரெயின்போ கேக் 400 கிராம் ரூ.500, 80 கிராம் ரூ.70.
பிளாக்கரண்ட் கேக் 400 கிராம் ரூ.390, 80 கிராம் ரூ.70.
ரெட் வெல்வெட் கேக் 400 கிராம் ரூ.600, 80 கிராம் ரூ.70.
மேங்கோ கேக் 800 கிராம் ரூ.720.
ப்ளூ பெர்ரி கேக் 800 கிராம் ரூ.840.
ஜெர்மன் பிளாக் பாரஸ்ட் கேக் 800 கிராம் ரூ.780, 80 கிராம் ரூ.70.