சென்னை ஆவடியில் சிறப்புக் காவல் படையினரின் காவல் பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை-2022 ஆம் ஆண்டிற்கான காவல் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு விழா பாஸிங் அவுட்பரேட்” மற்றும் 136 காவலர்களுக்கான 6 மாத கால அடிப்படை பயிற்சி ஆவடி படை பயிற்சி மையத்தில் 19.10.2022 தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் பேசிய அவர், “தேசத்திற்கான தன்னலமற்ற சேவைக்கு உங்களை அர்ப்பணித்து, அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்க பாடுபட வேண்டும்’’ என்று தெரிவித்தார். மேலும் பயிற்சிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சந்தீப்ராய் ரத்தோர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் பயிற்சி அளித்த காவல் அதிகாரிகள் மற்றும் பயிற்சியில் ஈடுபட்டவர்களின் பெற்றோர்களுக்கு பெருமைக்குரிய தருணமாக இவ்விழா அமைந்தது. இவ்விழாவில் பயிற்சிப்படை முதல்வர் தளவாய் விஜயலட்சுமி கலந்து கொண்டார்.