Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரக போலீஸ் சோதனையில் சிக்கிய மயிலாடுதுறை கொலை குற்றவாளி

69

மாங்காடு போலீசார் இன்று 25.02.2023 அதிகாலை 1.45 மணிக்கு, ஜிப்சி இன்சார்ஜ் உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் டிரைவர் இரண்டாம் நிலை காவலர் அலாவுதீன் ஆகியோர் மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எம்.எம்.எஸ் மருத்துவமனைக்கு அருகில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்ததைக் கண்டனர்.

சந்தேகமடைந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மயிலாடுதுறை, ஆத்துக்குடி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கர்லிங் கார்த்திக் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவரிடம் எப்ஆர்எஸ் அப்பிளிகேஷன் மூலமாக போலீசார் சரி பார்த்தபோது, அவர் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளி என்று தெரியவந்தது. அதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் மீது மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளதும் அவர் வரலாற்றுப் பதிவேடு ரவுடி என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து வைத்தீஸ்வரன் கோயில் காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவருக்கு எதிரான இரண்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நிறைவேற்றுவதற்காக. சம்பந்தப்பட்ட காவலர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.