ஆவடி காவல் ஆணையரக நிகழ்வுகள் அடங்கிய சிறப்பு புத்தகத்தை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டார்.
சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தை கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் 20 காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்தியக் குற்றப்பிரிவு, ஆயுதப்படை, நுண்ணறிவுப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு என ஒரு கமிஷன ரேட்டுக்குறிய அத்தனை அந்தஸ்துக்களும் நிறையப் பெற்று ஆவடி கமிஷனரேட் தற்போது வலுவான காவல் படையாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகம் இதுவரை செய்த சிறந்த செயல்பாடுகள் அடங்கிய புத்தகத்தை சந்தீப்ராய் ரத்தோர் முயற்சியில் ஆவடி காவல் ஆணையரக போலீசார் தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதன் வெளியீட்டு விழா நேற்று ஆவடி காவல் ஆணையர அலுவலகத்தில் நடந்தது. அதன் முதல் புத்தக சிறப்புப் பதிப்பை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் முதல் ஆயுதபடைக்கான அதி நவீன உள்கட்டமைப்பு, நேரடி உணவு வசதியுடன் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறை, ஆவடி இரவு மாரத்தான் போட்டியின் முதல் பதிப்பு, அடையாள பிரதிநிதிகள் குழு போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவில் இந்தப் புத்தகத்தை ஆவடி கமிஷனரேட் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.