சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் 74வது குடியரசு தினவிழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் நடந்தது.
சென்னை ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை 8 மணியளவில் 74வது குடியரசு தினவிழா நடைபெற்றது. கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை போலீசார், ஊர்க் காவல் படை, போக்குவரத்து காவல் வார்டன்களின் காவல் அணிவகுப்பு, பள்ளி மாணவர் களின் பேண்ட் வாத்திய இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மேலும் பள்ளி மாணவர்களின் கலை இலக்கிய நடனம், சிலம்பம், கராத்தே நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் மனைவி ஷில்பம் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.