Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரகத்தில் காவலர்களுக்கு தண்ணீர், மோர் பந்தல்

88

சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைகளில் பணிபுரியும் காவலர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் மற்றும் தலைக்கு வெயில் தொப்பி ஆகியவற்றை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர்களுக்கு வழங்கினார்.

சென்னை நகரில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காலை 10 மணிக்கு கொளுத்தத் துவங்கும் வெயில் மாலை 4 மணி வரை நீடிக்கிறது.

இதனால் ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறை போலீ சாரின் தாகத்தை தணிக்கும் வகையில் மோர் பந்தலை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாடி சரவணா ஸ்டோர் அருகே நேற்று திறந்து வைத்தார்.

பொதுமக்கள் மற்றும் போக்கு வரத்து காவலர்களுக்கு மோர் பாக்கெட்டுகள் வழங்கப் பட்டன. ஆவடி காவல் ஆணை யரகம் முழுவதும் நேற்று 24 இடங்களிள் ஒரே நேரத்தில் இந்த தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மேலும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்கு வரத்து காவலர்களுக்கு 50 வெயில் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.