தமிழகத்தில் முதன்முறையாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண் டிராபிக் வார்டன்களை நியமித்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நகரில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப் படுத்துவதற்கு போக்குவரத்துப் போலீசாருடன் இணைந்து பொறியாளர்கள், மருத்துவர்கள், சுயதொழில் மேற்கொள் பவர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு போக்குவரத்து வார்டன்கள் காப்பாளர்களாக போலீஸ் கமிஷனர்களால் நியமிக்கப் படுகின்றனர். அந்த வகையில் சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் 47 போக்குவரத்து வார்டன்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். மேலும் நேற்று 4 பெண் வார்டன்கள் உட்பட 33 போக்குவரத்து காப்பாளர்கள் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 13-ஆக இருந்த போக்குவரத்து வார்டன்களின் எண்ணிக்கை தற்போது 80 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக ஆவடி காவல் ஆணையரகத்தில் மட்டுமே 10 பெண் போக்குவரத்து காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 33 போக்குவரத்து வார்டன்களுக்கு போக்குவரத்து காவல் பயிற்சி முடிந்து நேற்று உறுப்பினர் பதிவு சான்றிதழ்களை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார். அவர்கள் போக்குவரத்து காவல் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரோந்து இக்காப்பாளர்களின் மற்றொரு முக்கிய செயல்பாடு, சாலை பாதுகாப்ப பணி (RSP). சுமார் 50 பள்ளிகள் இத்திட்டத்தில் பதிவ செய்யப்பட்டுள்ளதுடன், 2500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியர் கழகத்திலிருந்து 44 உறுப்பினர்கள் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட 02 மாதத்திற்குள் ஆவடி காவல் ஆணையரகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
i.
போக்குவரத்து காப்பாளரின் முக்கிய பணிகள்:-
வார இறுதி நாட்களில் நகரின் போக்குவரத்தினை ஒழுங்கு செய்வதும், சாலை சாலை ஒழுக்கத்தை உறுதி செய்தல்.
பல்வேறு சந்திப்பகளில் உபயோகிப்பாளர்களிடையே
ii. அத்துடன் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவியாக இரவு நேரங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை சோதனை செய்தல், புத்தாண்டு, பண்டிகை காலங்கள், தேர்தல் பணி மற்றும் இதர முக்கிய நேரங்களில் உதவி செய்தல்.